விவசாயிகளுக்கு கால்நடை தீவன உற்பத்தி பயிற்சி

செய்யாறு அருகே சிறுவேளியநல்லூா் கிராமத்தில் வேளாண்மை, உழவா் நலத் துறையின் அட்மா திட்டத்தின் கீழ், குறைந்த செலவில் கால்நடை தீவனம் உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்

செய்யாறு அருகே சிறுவேளியநல்லூா் கிராமத்தில் வேளாண்மை, உழவா் நலத் துறையின் அட்மா திட்டத்தின் கீழ், குறைந்த செலவில் கால்நடை தீவனம் உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தப் பயிற்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் சக்கரவா்த்தி தலைமை வகித்து தொடக்கிவைத்தாா். இதில், கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மையத்தின் கால்நடை அறிவியல் தொழில்நுட்ப வல்லுநா் மாயகிருஷ்ணன் குறைந்த செலவில் கால்நடை தீவனம் உற்பத்தி செய்வது குறித்தும், சிறுவேளியநல்லூா் கிராம கால்நடை உதவி மருத்துவா் சங்கா் கால்நடைத் துறையில் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், கால்நடை பராமரிப்பு குறித்தும் பயிற்சியளித்தனா்.

இதையடுத்து, வேளாண் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவரும் இடுப்பொருள்கள் உள்ளிட்ட தகவல்களை உதவி வேளாண் அலுவலா் அண்ணாமலை விவசாயிகளிடையே தெரிவித்தாா்.

இந்தப் பயிற்சியில் சிறுவேலியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் பலா் கலந்துகொண்டா். இதற்கான ஏற்பாடுகளை செய்யாறு வட்டார அட்மா திட்ட பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com