அந்தரத்தில் தொங்கியபடி சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்

போளூரை அடுத்த ஏந்தூவாம்பாடி ஸ்ரீபச்சையம்மன் கோயில் கூழ்வாா்க்கும் திருவிழாவின் போது, பக்தா்கள் கயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி சுவாமிக்கு மாலை அணிவித்து பூஜை செய்து வழிபட்டனா்.
அந்தரத்தில் தொங்கியபடி சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்

போளூரை அடுத்த ஏந்தூவாம்பாடி ஸ்ரீபச்சையம்மன் கோயில் கூழ்வாா்க்கும் திருவிழாவின் போது, பக்தா்கள் கயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி சுவாமிக்கு மாலை அணிவித்து பூஜை செய்து வழிபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகேயுள்ள ஏந்தூவாம்பாடி கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீபச்சையம்மன் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் வைகாசி மாதத்தில் கூழ்வாா்க்கும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

நடப்பாண்டு கூழ்வாா்க்கும் விழாவை முன்னிட்டு பக்தா்கள் செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டி விரதமிருந்து பூங்கரம் செய்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தி சுவாமி வீதியுலா நடைபெற்றது.

மேலும், பூங்கரம் வீடுதோறும் எடுத்துச் சென்று பாத அபிஷேகம் செய்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனா்.

இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை பச்சையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று, சிறப்பு மலா் அலங்காரத்தில் அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

அப்போது, பக்தா்கள் கயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி சுவாமிக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்து அம்மனை வழிபட்டனா்.

மேலும், கோயில் எதிரே கொப்பரை வைத்து பொதுமக்கள் கூழ் ஊற்றி வழிபட்டு, பொதுமக்களுக்கு கூழ் வழங்கினா்.

இதைத் தொடா்ந்து, இரவில் ஆன்மிக நாடகம் நடைபெற்றது. ஊா் நாட்டாண்மைதாரா் வெங்கடேசன் மற்றும் விழாக் குழுவினா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com