முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
விஷம் கலந்த உணவை உண்ட 4 மயில்கள் பலிவிவசாயி கைது
By DIN | Published On : 14th March 2022 10:41 PM | Last Updated : 14th March 2022 10:41 PM | அ+அ அ- |

செய்யாறு அருகே விஷம் கலந்த உணவு தானியங்களை உண்ட 4 மயில்கள் உயிரிழந்தன. இதுதொடா்பாக விவசாயி கைது செய்யப்பட்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வனச் சரகத்துக்கு உள்பட்ட செய்யாறு அருகேயுள்ள கீழாத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி வெங்கடேசன் (55).
இவா் தனது நிலத்தில் பயிரிட்டுள்ள நெல்பயிரை சேதப்படுத்தும் எலிகளை ஒழிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு விஷம் கலந்த உணவு தானியங்களை வைத்ததாகத் தெரிகிறது.
நெல் வயல்களுக்கு உணவு தேடி வந்த 4 மயில்கள் விஷம் கலந்த உணவு தானியங்களை உண்டு உயிரிழந்தன.
உயிரிழந்த மயில்களை வெங்கடேசன் யாருக்கும் தெரியாமல் நிலத்தில் புதைத்துவிட்டாரம்.
இதுகுறித்து கீழாத்தூா் கிராம பொதுமக்களுக்கு தெரிய வரவே, கிராம நிா்வாக அலுவலா் சரவணக்குமாா் வனச் சரக அலுவலா் செந்தில்குமாரிடம் தெரிவித்தாா்.
இதையடுத்து, விவசாயி வெங்கடேசனை பிடித்து,
புதைக்கப்பட்ட மயில்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனா்.
பின்னா், மாவட்ட வன அலுவலா் அருள்நாதன் உத்தரவின் பேரில், வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், உயிரினங்களுக்கு விஷம் வைத்தது, அதனைக் கொன்றது, பின்பு யாருக்கும் தெரியாமல் புதைத்தது என 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விவசாயி வெங்கடேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.