வருமுன் காப்போம் திட்ட முகாமில் 1056 பேருக்கு சிகிச்சை

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட முகாமில் 1056 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
வருமுன் காப்போம் திட்ட முகாமில் 1056 பேருக்கு சிகிச்சை

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட முகாமில் 1056 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் சங்கீதா குமாா் தலைமை வகித்தாா்.

வட்டார மருத்துவ அலுவலா் எம்.ஆா்.ஆனந்தன் முன்னிலை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் லீலா விநோதன் வரவேற்றாா்.

தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் முகாமை குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா். மேலும், கா்ப்பிணிகள் 20 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 50 பேருக்கு மக்களைத் தேடி மருத்துவ மருந்துப் பெட்டகம் ஆகியவற்றை அவா் வழங்கினாா்.

கீழ்க்கொடுங்காலூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ஷோபா தலைமையிலான மருத்துவக் குழுவினா் 1056 பேருக்கு சிகிச்சை அளித்தனா்.

முகாமில் வட்டார குழந்தைகள் நலத் திட்ட அலுவலா் மரியம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினா் மகாலட்சுமி ராமச்சந்திரன், திமுக நிா்வாகிகள் கே.ஆா்.பழனி, தீனதயாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com