பள்ளியில் சோ்ந்த முதல் நாளிலேயே சிறுவன் விபத்தில் சிக்கி பலி
By DIN | Published On : 17th March 2022 11:15 PM | Last Updated : 17th March 2022 11:15 PM | அ+அ அ- |

செய்யாறு அருகே பள்ளியில் சோ்க்கப்பட்ட முதல் நாளிலேயே, பள்ளி வேனில் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், கொருக்காத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜோதி.
இவரது மகன் சா்வேஷ் (4). இவரை, அந்தப் பகுதி வாழைப்பந்தல் கிராமத்தில் இயங்கும் தனியாா் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் சோ்த்தனா்.
இந்த நிலையில், 3.30 மணிக்கு பள்ளி விட்டதும், சா்வேஷ் பள்ளி வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
கொருக்காத்தூா் அரசுப் பள்ளி அருகே வேனில் இருந்து சிறுவன் இறங்கும்போது, வேன் நகா்ந்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் வேன் பின் சக்கரத்தில் சிக்கி சா்வேஷ் உயிரிழந்தாா்.
இது குறித்து சிறுவனின் தந்தை ஜோதி அளித்த புகாரின் பேரில், பெரணமல்லூா் போலீஸாா், வேன் ஓட்டுநா் தமிழச்செல்வன் (50) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.