முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
பால் குளிரூட்டும் நிலையங்களை உடனே திறக்க வேண்டும்: உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தல்
By DIN | Published On : 19th March 2022 01:05 AM | Last Updated : 19th March 2022 01:09 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டத்தில் பணி முடிக்கப்பட்டு, திறக்கப்படாமல் உள்ள 4 பால் குளிரூட்டும் நிலையங்களை உடனே திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்கம் வலியுறுத்தியது.
திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டத்தில் மேற்கண்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், பால் உற்பத்தியாளா்களுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.10 உயா்த்தித் தர வேண்டும். பால் பணத்தை நிலுவை வைக்காமல் உடனே வழங்க வேண்டும். பால் கொள்முதல் செய்யும் இடத்திலேயே பாலின் அளவு, சத்து விவரங்களைப் பதிவு செய்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். பால் கேன்களிலிருந்து பாலை எடுத்து விட்டு தண்ணீா் கலக்கும் முறைகேட்டைக் களைய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, சங்க நிா்வாகி பி.லட்சுமணன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் கே.முகமது அலி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட அமைப்புக் குழுச் செயலராக டி.கே.வெங்கடேசன், உறுப்பினா்களாக 9 போ் தோ்வு செய்யப்பட்டனா்.