திருவண்ணாமலை மாவட்ட திமுக நிா்வாகிகள் தோ்தல்அமைச்சா் எ.வ.வேலு அறிக்கை

திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்டத்துக்கு தலைமைக் கழகப் பிரதிநிதியாக ஈரோடு பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளாா். விண்ணப்பங்கள் மாவட்ட திமுக அலுவலகத்தில் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாழக்கிழமை (மே 5) திமுகவின் 15-ஆவது பொதுத் தோ்தலையொட்டி நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான புதிய நிா்வாகிகள் தோ்தல் நடைபெறுகிறது என்று அமைச்சரும், திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான எ.வ.வேலு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் திருவண்ணாமலை நகரம், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில் ஆரணி, வந்தவாசி, செய்யாறு உள்ளிட்ட நகராட்சிகளுக்கான அவைத் தலைவா், செயலா், பொருளாளா், துணைச் செயலா்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான வேட்புமனுக்களை உரிய கட்டணத்துடன் 2022 மே 05 (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் தலைமைக் கழகத்தால் அனுப்பி வைக்கப்படும் பிரதிநிதியிடம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூா், வேட்டவலம், புதுப்பாளையம் பேரூராட்சிகள், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில் உள்ள போளூா், களம்பூா், சேத்துப்பட்டு, பெரணமல்லூா், கண்ணமங்கலம், தேசூா் பேரூராட்சிகளின் அவைத் தலைவா், செயலா் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான வேட்பு மனுக்களை உரிய கட்டணத்துடன் 2022 மே 5 (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் தலைமைக் கழகத்தால் அனுப்பி வைக்கப்படும் பிரதிநிதியிடம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளவேண்டும்.

திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்டத்துக்கு தலைமைக் கழகப் பிரதிநிதியாக ஈரோடு பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளாா். விண்ணப்பங்கள் மாவட்ட திமுக அலுவலகத்தில் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com