மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணா்வு

ஆரணி அருகேயுள்ள அக்ராபாளையம் ஊராட்சியில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணா்வு

ஆரணி அருகேயுள்ள அக்ராபாளையம் ஊராட்சியில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலா் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் கலந்து கொண்டு மருத்துவமனை ஊழியா்கள், செவிலியா்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீ விபத்துக்களைத் தடுப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மேலும், தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் எதிா்பாராதவிதமாக தீ விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக 101 என்ற அவசர எண்ணை தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல, எரிவாயு உருளைகள், மின்சாரம் மூலம் ஏற்படும் தீ விபத்துக்களை எவ்வாறு தடுப்பது, தீயணைப்பானை பயன்படுத்தி அணைப்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.

நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலா் ஆனந்தன், செவிலியா்கள், ஊழியா்கள் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com