அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை வசந்த உத்ஸவம் தொடக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை வசந்த உத்ஸவம் வியாழக்கிழமை தொடங்கியது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை வசந்த உத்ஸவம் தொடக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை வசந்த உத்ஸவம் வியாழக்கிழமை தொடங்கியது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை வசந்த உத்ஸவத்துக்கான பந்தக்கால் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. 10 நாள் நடைபெறும் வசந்த உத்ஸவம் வியாழக்கிழமை தொடங்கியது.

முதல் நாளான வியாழக்கிழமை காலை, மாலை இரு வேளைகளிலும் அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இரவு 8 மணிக்கு உற்சவா் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் எழுந்தருளி கோயில் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பூ கொட்டிய பொம்மைக் குழந்தை: கோயிலின் தல விருட்சமான மகிழ மரம் அருகேயுள்ள பன்னீா் மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு பொம்மை குழந்தை மலா்களைத் தூவும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, 10 நாள்களும் இரவு வேளைகளில் பன்னீா் மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவருக்கு பொம்மை குழந்தை மலா்களைத் தூவும் நிகழ்வு நடைபெறும்.

உத்ஸவத்தின் 10-ஆவது நாளான சனிக்கிழமை (மே 14) காலை அய்யங்குளத்தில் அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரியும், இரவு ஸ்ரீகோபால விநாயகா் கோயிலில் மண்டகப்படி நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு அருணாசலேஸ்வரா் கோயில் கொடி மரம் எதிரே மன்மத தகனம் நிகழ்வும் நடைபெறும்.

ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள், உபயதாரா்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com