தெள்ளாா் ஒன்றியக் குழுக் கூட்டம்
By DIN | Published On : 06th May 2022 12:00 AM | Last Updated : 06th May 2022 12:00 AM | அ+அ அ- |

தெள்ளாா் ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் கமலாட்சி இளங்கோவன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ந.ராஜன்பாபு, ஸ்ரீதா், துணைத் தலைவா் விஜயலட்சுமி தண்டபாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் பங்கேற்ற ஒன்றியக் குழு உறுப்பினா்கள்
தங்களது பகுதியில் வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றக் கோரி பேசினா்.
அப்போது, கீழ்ப்புத்தூா் பகுதிக்கு உரிய பேருந்து வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினா் தசரதன் கோரிக்கை விடுத்தாா். பின்னா், பல்வேறு வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது தொடா்பான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.