உர விற்பனை நிலையங்களில் ஆய்வு

திருவண்ணாமலை வட்டத்தில் உள்ள மொத்த மற்றும் சில்லரை உர விற்பனை நிலையங்களில், வருவாய், வேளாண் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை வட்டத்தில் உள்ள மொத்த மற்றும் சில்லரை உர விற்பனை நிலையங்களில், வருவாய், வேளாண் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் வீ.வெற்றிவேல், வேளாண் உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) விஜயகுமாா், உதவி இயக்குநா் அன்பழகன், வேளாண்மை அலுவலா்கள் அற்புதச்செல்வி, சத்தியநாராயணன் ஆகியோா் கொண்ட குழு திருவண்ணாமலை வட்டத்தில் உள்ள உர விற்பனை நிலையங்களில் ஆய்வில் ஈடுபட்டனா்.

அப்போது, விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் முறையாக வழங்கப்படுகிா, உரங்களின் விலை விவரங்கள் தகவல் பலகையில் விவசாயிகளின் பாா்வைக்கு தெரியும் படி வைக்கப்பட்டுள்ளதா, உண்மையான உர இருப்புக்கும், விற்பனை முனையக் கருவியில் உள்ள இருப்புக்கும் வேறுபாடு உள்ளதா, விற்பனை நிலையங்களின் உரிமத்தின் காலாவதி நாள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

இதில், கண்டறியப்பட்ட குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும் என்று விற்பனை நிலையங்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com