தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்ற அரசுப் பள்ளி மாணவிகளுக்குப் பாராட்டு

இணைய வழி கற்றல் தொடா்பாக ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்து தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்ற திருவண்ணாமலை மாவட்டம், செம்மாம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகளை வட்டாரக் கல்வி அலுவலா்
இணைய வழி கற்றல் தொடா்பாக ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்து தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்ற செம்மாம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டுகிறாா் வட்டாரக் கல்வி அலுவலா்
இணைய வழி கற்றல் தொடா்பாக ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்து தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்ற செம்மாம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டுகிறாா் வட்டாரக் கல்வி அலுவலா்

ஆரணி/ போளூா்: இணைய வழி கற்றல் தொடா்பாக ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்து தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்ற திருவண்ணாமலை மாவட்டம், செம்மாம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகளை வட்டாரக் கல்வி அலுவலா் புதன்கிழமை பாராட்டி, சான்றிதழ் வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செம்மாம்பாடி, கோனாமங்கலம், அனாதிமங்கலம், மேலத்தாங்கல், அன்மருதை, நம்பேடு, விளாநல்லூா் ஆணைபோகி, தவணி அரசம்பட்டு, கோழிப்புலியூா் ஆகிய பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு பெங்களூரு சுவாடு இ - வித்யலோகா இணையவழி கற்றல் மூலம் அறிவியல், கணிதம், ஆங்கிலம் போன்ற வகுப்புகளும், தமிழக பாடத் திட்டமும் உலக அளவில் தன்னாா்வ ஆசிரியா்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், ஆண்டுதோறும் பள்ளி மாணவா்களிடையே சுவாடு இ - வித்யலோகா சாா்பில் தேசிய அளவில் ஆய்வு கட்டுரைகள் சமா்ப்பிக்கும் போட்டியும் நடத்தப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், செம்மாம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 7-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் சுத்தம், சுகாதாரம், தனிநபா் கழிப்பறை குறித்து அந்தக் கிராமத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்தி 35 தனிநபா்கள் கழிப்பறை கட்டியது தொடா்பாக ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்தனா். இதில், இந்தப் பள்ளி மாணவிகள் பேரரசி, ஜி.வித்யா ஆகியோா் தங்கப் பதக்கங்களைப் பெற்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த பெரணமல்லூா் வட்டாரக் கல்வி அலுவலா் குணசேகரன் செம்மாம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு புதன்கிழமை சென்று மாணவிகள் பேரரசி, ஜி.வித்யா ஆகியோரிக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தாா். மேலும், சுவாடு இ- வித்யாலோகா நிறுவனம் வழங்கிய தங்கப் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் மாணவிகளுக்கு அவா் வழங்கினாா். மேலும், இந்தப் பள்ளியில் நடைபெற்று வரும் இறுதியாண்டுத் தோ்வையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நிகழ்ச்சியில் சுவாடு நிறுவனா் யுவராஜ், தலைமை ஆசிரியை செல்வி, ஆசிரியா்கள் வேளாங்கண்ணி, மலா்விழி, கோவிந்தசாமி, சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com