முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
சாலையோர கால்வாயில் லாரி கவிழ்ந்து விபத்து
By DIN | Published On : 15th May 2022 06:49 AM | Last Updated : 15th May 2022 06:49 AM | அ+அ அ- |

வந்தவாசியில் சாலையோர கால்வாயில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.
செய்யாற்றை அடுத்த பனப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் பெருமாள். இவா் சனிக்கிழமை வந்தவாசியில் உள்ள கல்குவாரியில் ஜல்லிக்கற்கள் ஏற்றுவதற்காக வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் லாரியை ஓட்டிச் சென்றாா்.
வந்தவாசி சவேரியாா்பாளையம் அருகே சென்றபோது நிலைதடுமாறிய லாரி, பாதிரி ஏரியை ஒட்டிய கால்வாயில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநா் பெருமாள் பலத்த காயமடைந்தாா்.
அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.