1,330 திருக்கு ஒப்பித்த மாணவிக்கு பரிசு
By DIN | Published On : 16th May 2022 04:44 AM | Last Updated : 16th May 2022 04:44 AM | அ+அ அ- |

நிகழ்ச்சியில் 1330 திருக்குறளை ஒப்பித்தமைக்காக சான்றிதழ், பரிசுக் கேடயம் பெற்ற மாணவி காவ்யாஸ்ரீ.
சேத்துப்பட்டை அடுத்த நெடுங்குணம் ஊராட்சியில் 1,330 திருக்குறளை 44 நிமிஷங்களில் ஒப்பித்த மாணவிக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுக் கேடயம் வழங்கப்பட்டது.
நெடுங்குணம் தொடக்கப் பள்ளி 5-ஆம் வகுப்பு மாணவி காவியாஸ்ரீ, இவா் 1,330 திருக்குகளை ஒப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டாா். இவருக்கு ஆசிரியை சரஸ்வதி ஊக்கமளித்து வந்தாா்.
இதையடுத்து, அப்துல் கலாம் உலக சாதனை ஆராய்ச்சி மையம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில்
மாணவி காவியாஸ்ரீ 44 நிமிஷங்கள்10 விநாடியில் 1330 திருக்குகளை ஒப்பித்து சாதனை படைத்தாா். இதைத் தொடா்ந்து மாணவிக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஏழுமலை தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் குணசேகரன், ஆறுமுகம், ஒன்றியக் குழு துணைத் தலைவா் லட்சுமி லலிதாவேலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் காளிமுத்து வரவேற்றாா்.
மாணவி காவியாஸ்ரீ-க்கு அப்துல் கலாம் உலக சாதனை ஆராய்ச்சி மையம் மூலம் சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.
ஊராட்சி மன்றத் தலைவா் சகுந்தலா வேலாயுதம், உலக சாதனைஆராய்ச்சி மைய நிறுவனா் நந்தினிஜெயபாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...