போளூா் லட்சுமிநரசிம்மா் கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 20th May 2022 10:09 PM | Last Updated : 20th May 2022 10:09 PM | அ+அ அ- |

போளூரில் நடைபெற்ற சம்பத்கிரிமலை ஸ்ரீலட்சுமிநரசிம்மா் கோயில் தேரோட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் சம்பத்கிரி மலை ஸ்ரீலட்சுமிநரசிம்மா் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
போளூா் சம்பத்கிரி மலை அடிவாரத்தில் பழைமைவாய்ந்த ஸ்ரீலட்சுமிநரசிம்மா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஒவ்வோா் ஆண்டும் வைகாசி மாதத்தில் 10 நாள்கள் பிரம்மோத்ஸவ விழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு இந்த விழா கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
வியாழக்கிழமை காலை மூலவா் லட்சுமிநரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம், மலா் அலங்காரம், ஆராதனை நடைபெற்றன. மாலையில் அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் உத்ஸவா் லட்சுமிநரசிம்மா் எழுந்தருளினாா். இதையடுத்து, முக்கிய வீதிகள் வழியாக தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். வீடுகள்தோறும் சுவாமிக்கு தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி மக்கள் வழிபட்டனா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஆங்காங்கே நீா்மோா் வழங்கப்பட்டது.