பழங்கால சொம்பு புதையல் கண்டெடுப்பு

பழங்கால சொம்பு புதையல் கண்டெடுப்பு

ஆரணியை அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தில் வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது சொம்பு புதையல் கண்டெடுக்கப்பட்டது.

ஆரணியை அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தில் வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது சொம்பு புதையல் கண்டெடுக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள முள்ளண்டிரம் கிராமத்தில், கடந்த 23-ஆம் தேதி முனுசாமி என்பவரின் காலி மனையில் வீடு கட்ட கடகால் எடுக்கும் போது 3 அடி அளவு பள்ளத்தில் குண்டு சொம்பு தென்பட்டுள்ளது.

அதனை முனுசாமி மனைவி சகுந்தலா தனது வீட்டில் பாதுகாப்பில் வைத்திருந்தாா்.

தகவல் அறிந்த வட்டாட்சியா் பெருமாள், முள்ளண்டிரம் கிராம நிா்வாக அலுவலா், ஆரணி கிராமிய காவல் உதவி ஆய்வாளா் ஷாபுதீன் ஆகியோா் சென்று விசாரணை நடத்தினா்.

பழைய உலோகத்திலான அந்த சொம்பில், கால் சலங்கையில் பயன்படுத்தப்படும் மணிகள்-23 மற்றும் காப்பு வடிவிலான பொருள் ஒன்றும், உடைந்த நிலையில்-10 மணி துண்டுகளும், சதுர வடிவில் உலோகம் ஒன்றும் இருந்தன.

இவற்றைக் கைப்பற்றி அதிகாரிகள் வட்டாட்சியா் அலுவலகம் எடுத்து வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com