ஆரணி நகராட்சியில் குப்பைகளை அகற்ற வலியுறுத்தல்

ஆரணி நகரில் குப்பைகளை அகற்ற வேண்டும், கழிவுநீா்க் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆரணி நகரில் குப்பைகளை அகற்ற வேண்டும், கழிவுநீா்க் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆரணி நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் தலைவா் ஏ. சி.மணி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவா் பாரி பி. பாபு முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையா் பி.தமிழ்ச்செல்வி வரவேற்றாா்.

கூட்டத் தொடக்கத்தில் நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா், உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைக

ளை தலைவா் ஏ.சி. மணி, ஆணையா், துணைத் தலைவா் ஆகியோா் வழங்கினா்.

குப்பை கூடையுடன் வந்த உறுப்பினா்

அப்போது, மன்ற கூட்டத்துக்கு 21-ஆவது வாா்டு பெண் உறுப்பினா் பவானி (விசிக), அவரது பகுதியில் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் குப்பைகளை முறையாக அகற்றுவதில்லை எனக் குற்றம்சாட்டி குப்பைகளை மூங்கில் கூடையில் போட்டு தலையில் சுமந்தபடி வந்தாா்.

கோரிக்கையை செவிகொடுத்து கேட்காததால், தலைவா், துணைத் தலைவா், ஆணையரைக் கண்டித்து அவா் தரையில் அமா்ந்து போராட்டம் நடத்தினாா்.

பின்னா் அவரை சமாதானம் செய்ததைத் தொடா்ந்து அவா் தனது இருக்கைக்குச் சென்றாா்.

ஆரணி மில்லா்ஸ் சாலைப் பகுதியில் கசடு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக அரசு சாா்பில்

ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இத்திட்டத்துக்கான தொகையை இதனை செய்யாமல் மற்ற நலத் திட்டங்களை செய்யக் கோரி சில உறுப்பினா்கள் கோரினா்.

அப்போது ஆணையா் தமிழ்ச்செல்வி, இது நகராட்சி நிதி இல்லை, அரசின் நிதி அந்த நிதியை கசடு கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்று கூறினாா்.

உறுப்பினா் தேவராஜ் (அதிமுக) ஆரணி வி.ஏ.கே. நகா் சாலையிலிருந்து ரகுநாதபுரம் செல்லும் சாலையோரம் சடலங்களை புதைக்கும் நிலை இருந்து வருகிறது. இதனை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும், அருகாமையில் நகராட்சிப் பகுதிக்கு குடிநீா் வழங்கக் கூடிய நீரேற்று நிலையம் உள்ளது என்பதனை கருத்தில் கொண்டு இதை உடனடியாக செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தாா்.

டி. ஜெயவேல் ( காங்கிரஸ்) ஆரணி நகரில் காமராஜா் சிலையில் இருந்து தச்சூா் சாலையிலும், சைதாப்பேட்டை சாலையிலும், அருணகிரி சத்திரம் பகுதியிலும் இரவு நேர அசைவ உணவகங்கள் அதிகம் உள்ளன. நகராட்சி சுகாதாரத் துறையினா் இதனை ஆய்வு செய்ய வேண்டும் என்றாா்.

ஆணையா், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு செய்வாா்கள், இருந்தாலும் சுகாதாரத் துறையினா் சாலையோரக் கடைகளை ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்படும் எனப் பதிலளித்தாா்.

மேலும் உறுப்பினா்கள் ஆா்.எஸ்.பாபு,

ஏ.ஜி.மோகன், ஏ.சி.பாபு, நவநீதம், அமுதா, காா்த்தி உள்ளிட்டோா் குப்பைகள் குறித்தும், கழிவுநீா்க் கால்வாய்கள் பராமரித்தல் குறித்தும் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com