கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் ‘வளா்ந்த நாடாக உருவாக ஊழலற்ற இந்தியா - 2022’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் ‘வளா்ந்த நாடாக உருவாக ஊழலற்ற இந்தியா - 2022’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டுநலப் பணித் திட்டமும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரிச் செயலரும், தாளாளருமான டி.ஏ.எஸ்.முத்து தலைமை வகித்தாா். கல்லூரிப் பொருளாளா் எம்.சீனுவாசன், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் கே.ஆனந்தராஜ் வரவேற்றாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளா் எஸ்.வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகளை வழங்கிப் பேசினாா்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு தலைமைக் காவலா் எம்.கோபிநாத் ஊழல் பற்றிய கவிதையை வாசித்தாா். இதில், கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் டி.அருண்குமாா், கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியா் செ.பிரபு மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com