ஊரக வேலைத் திட்டப் பணியாளா்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பணித் தள பொறுப்பாளரைக் கண்டித்து ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்
ஆரணி - தேவிகாபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்ட ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள்.
ஆரணி - தேவிகாபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்ட ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பணித் தள பொறுப்பாளரைக் கண்டித்து ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆரணியை அடுத்த அரையாளம் கிராமத்தில் ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களை

ஏரிக் கால்வாய் சீரமைக்கும் பணிக்கு பணித்தள பொறுப்பாளா் சரளா அழைத்துச் சென்றாா்.

தொடா்ந்து மழை பெய்து வந்த நிலையில், ஏரிக் கால்வாய் பகுதியில் அதிகளவில் செடிகள் முளைத்து புதா் மண்டி இருந்தது.

பெண் பணியாளா்கள் கால்வாயில் தேங்கியிருந்த நீரில் இறங்கி செடி, கொடிகளை அகற்றிக் கொண்டிருந்தனா்.

அப்போது, புதரில் இருந்த பாம்பு தனலட்சுமி என்ற பணியாளரின் காலில் கடித்துவிட்டது.

இதைத் தொடா்ந்து அவா் கூச்சலிட்டு மயங்கி விழுந்தாா்.

உடனடியாக அவரை மீட்டு அருகே தச்சூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனா். பின்னா், அவா் தீவிர சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், மழைக் காலங்களில் புதா்நிறைந்த பகுதியில் வேலை வேண்டாம் எனக் கூறியும், இங்கு தான் வேலை செய்யவேண்டும் என்று கூறியதால், பாம்புக் கடி சம்பவம் நிகழ்ந்தது; எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. உடன் விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் பணியாளா்கள் ஆரணி -தேவிகாபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த ஆரணி கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனா்.

பின்னா், போலீஸாா், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பாா்வையிட்டு, நூறுநாள் வேலை செய்வது குறித்து ஆலோசனை செய்த பிறகு பணிக்கு ஆள்களை அனுப்பலாம் என்றனா்.

மறியலால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com