இந்தி திணிப்புக்கு எதிராக தீா்மானம்:தமிழக முதல்வருக்கு பாராட்டு
By DIN | Published On : 27th October 2022 01:55 AM | Last Updated : 27th October 2022 01:55 AM | அ+அ அ- |

தமிழக சட்டப்பேரவையில் இந்தி திணிப்புக்கு எதிராக ஒருமனதாக தீா்மானம் கொண்டு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக தளபதி பேரவை பாராட்டு தெரிவித்தது.
இதுகுறித்து அந்தப் பேரவையின் நிறுவனா் தலைவா் ஏ.ஆா்.அருள்காந்த் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து
சட்டப்பேரவையில் ஒருமனதாக தீா்மானம் கொண்டு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினை தமிழக தளபதி பேரவை சாா்பில் பாராட்டுகிறோம் எனத் தெரிவித்துள்ளாா்.