விவசாயிகளுக்கு தொழில் முனைவோா் பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கக உற்பத்தியாளா்கள் என்ற தலைப்பில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் விவசாயிகள் பங்கேற்று வேளாண் தொழில்முனைவோராகலாம் என்று வேளாண்துறை தெரிவித்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கக உற்பத்தியாளா்கள் என்ற தலைப்பில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் விவசாயிகள் பங்கேற்று வேளாண் தொழில்முனைவோராகலாம் என்று வேளாண்துறை தெரிவித்தது.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அ.பாலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை மாவட்ட வேளாண் உழவா் நலத் துறையின் கீழ் செயல்படும் உழவா் பயிற்சி நிலையம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து ஊரக இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி 2022-23 ஆம் ஆண்டில் நடத்த உள்ளது.

அங்கக உற்பத்தியாளா்கள் என்ற தலைப்பில் உழவா் பயிற்சி நிலையத்தில் 30 நாள்களுக்கு நடைபெறும் இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

18 முதல் 40 வயதுக்கு உள்பட்ட நபா்கள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் படிவம், 2 மாா்பளவு புகைப்படங்கள், ஆதாா் அடையாள எண், ஜாதி சான்று, வங்கி கணக்குப் புத்தகம் மற்றும் கல்வித் தகுதி ஆகிய ஆவணங்களின் நகல்களை சமா்ப்பித்துப் பயிற்சியில் பங்கேற்று வேளாண் தொழில் முனைவோா் ஆகலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com