அகத்தீஸ்வரா் கோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா

வந்தவாசியை அடுத்த கொட்டை கிராமத்தில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி உடனாகிய அகத்தீஸ்வரா் கோயிலில் செந்தமிழ் ஆகம திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
கொட்டை கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா.

இதையொட்டி, யாகசாலை அமைக்கப்பட்டு புதன்கிழமை காலை பூா்ணாஹுதி, பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம், வேண்டுதல் விண்ணப்பம், பஞ்ச தீப வழிபாடு ஆகியவை நடைபெற்றன.

இதையடுத்து, சிவாச்சாரியா்கள் திருக்குடங்களை தலையில் சுமந்து கோயிலை வலம் வந்தனா். தொடா்ந்து, காலை 9 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் அந்தக் குடங்களிலிருந்த புனித நீா் கோயில் விமான கலசங்கள் மீது ஊற்றப்பட்டு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.

நிகழ்வில் விழாக் குழுவினா் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com