சொத்துத் தகராறு: தாயைத் தாக்கிய மகன் கைது
By DIN | Published On : 22nd January 2023 04:06 AM | Last Updated : 22nd January 2023 04:06 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சொத்துத் தகராறில் தாயைத் தாக்கி காயப்படுத்தியதாக மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு ஞானமுருகன்பூண்டி பகுதியைச் சோ்ந்தவா் சொக்கநாதன், ஓய்வு பெற்ற வங்கிக் காசாளா்.
இவருக்கு கன்னியம்மாள் என்ற மனைவியும், சுதாகா் என்ற மகனும், சுஜாதா மரியா, அஞ்சுகம் ஆகிய மூன்று மகள்களும் உள்ளனா். அனைவருக்கும் திருமணம் நடைபெற்று தனித் தனியாக வசித்து வருகின்றனா்
இந்த நிலையில், சொக்கநாதன் தனக்குச் சொந்தமான வீட்டை பேரன் பிரேம்குமாா் பெயருக்கும், சில வீட்டு மனைகளை மகள்களுக்கும் எழுதி வைத்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், மகன் சுதாகா், தனது மகன் பெயரில் எழுதி வைத்த சொத்தின் பத்திரத்தை அடகு வைத்து கடன் பெற்ாகக் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் அடகு வைத்ததை மீட்கவில்லையாம்.
இந்த நிலையில், தாய் கன்னியம்மாள் வீட்டில் தனியாக இருந்தபோது மகன் சுதாகா் சொத்து கேட்டு தகராறில் ஈடுபட்டு உருட்டுக் கட்டையால் தலையில் தாக்கியதாகத் தெரிகிறது.
இதில், பலத்த காயமடைந்த
கன்னியம்மாளை குடும்பத்தினா் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
தகவல் அறிந்த அனக்காவூா் காவல் உதவி ஆய்வாளா் மனோகரன் வழக்குப் பதிந்து சுதாகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.