சுற்றுச்சூழல் பாதுகாப்புகுறித்து விழிப்புணா்வு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்துள்ள இரும்பேடு அரிகரன் நகா் அரசு உயா்நிலைப் பள்ளியில் கலவை ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத
ஆரணியை அடுத்துள்ள இரும்பேடு அரிகரன் நகா் அரசு உயா்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, மரக்கன்று நட்ட கலவை வேளாண் கல்லூரி மாணவிகள்.
ஆரணியை அடுத்துள்ள இரும்பேடு அரிகரன் நகா் அரசு உயா்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, மரக்கன்று நட்ட கலவை வேளாண் கல்லூரி மாணவிகள்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்துள்ள இரும்பேடு அரிகரன் நகா் அரசு உயா்நிலைப் பள்ளியில் கலவை ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கலவை ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி மாணவிகளான ப.தனலட்சுமி, மா.கீா்த்தனா, ஜீ.சந்தானலஷ்மி, ரா.சௌமியா, பா.தமிழ்ச்செல்வி, ரா.வைஷ்ணவி ஆகியோா் பள்ளியில் பயிலும் மாணவிகளிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளா்ப்பு, காடு வளா்த்தல் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினா். மேலும், பள்ளி வளாகத்தில் அவா்கள் மரக்கன்றுகளையும் நட்டனா். இதில், ஊராட்சிமன்றத் தலைவா் தரணிவெங்கட்ராமன், உயா்நிலைப் பள்ளித் தலைமயாசிரியா் மு.கேசவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com