860 கிராம ஊராட்சிகளில் இன்று கிராம சபைக் கூட்டம்
By DIN | Published On : 26th January 2023 01:39 AM | Last Updated : 26th January 2023 01:39 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டத்தின் 860 கிராம ஊராட்சிகளில் குடியரசு தினத்தையொட்டி, வியாழக்கிழமை (ஜன.26) சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
மாவட்டத்தில் மொத்தம் 860 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
கூட்டங்களில், அந்தந்த கிராம ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டாா்.