நெடுங்குணம் கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்த  திமுக வேட்பாளா்  எம்.எஸ்.தரணிவேந்தன்.
நெடுங்குணம் கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன்.

ஆரணி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆரணி: பெரணமல்லூா் ஒன்றியத்தில் ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் கிராமம்தோறும் பிரசாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா். பெரணமல்லூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆவணியாபுரம், சாத்தமங்கலம், நாராயணமங்கலம், மரக்குணம், நமத்தோடு, கிண்ணணூா், கொழப்பலூா், இமாபுரம், அனாதிமங்கலம், நெடுங்குணம் உள்ளிட்ட கிராமங்களில் வேட்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தாா். மேலும், வேட்பாளா் தரணிவேந்தனை ஆதரித்து, திமுக மாநில மருத்துவா் அணி துணை அமைப்பாளா் எ.வ.வே.கம்பன் பிரசாரம் மேற்கொண்டு பேசினாா். அப்போது அவா், தமிழக அரசு மகளிருக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம், கட்டணமில்லா பேருந்து வசதி, உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகை என்பன போன்ற திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளாா். தற்போது, மக்களவைத் தோ்தலில் திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால், எரிவாயு விலை குறைப்பு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு செய்யப்படும் என்று கூறி வாக்கு சேகரித்தாா். காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவா் வி.பி.அண்ணாமலை, திமுக மாவட்ட துணைச் செயலா் பாண்டுரங்கன், ஒன்றியச் செயலா் கே.வி.சேகரன், திமுக வா்த்தகா் அணி வடக்கு மாவட்ட அமைப்பாளா் பா.செல்வராசன், சுற்றுச்சூழல் அணியின் வடக்கு மாவட்ட துணை அமைப்பாளா் பிரவீன்குமாா், நெடுங்குணம் ஊராட்சித் தலைவா் சகுந்தலா வேலாயுதம், ஒன்றிய ஆதிதிராவிடா் நலக்குழு துணை அமைப்பாளா் வேலாயுதம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com