முப்பெரும் விழாவில் நினைவுப் பரிசு பெற்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள்.
முப்பெரும் விழாவில் நினைவுப் பரிசு பெற்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி முப்பெரும் விழா

செங்கம்: செங்கத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் மகளிா் தின விழா, வெள்ளி விழா காணும் ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா, பணி நிறைவு பெறும் ஆசிரியா், தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா ஆகியவை முப்பெரும் விழாவாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு செங்கம் வட்டக் கிளைத் தலைவா் பவானி தலைமை வகித்தாா். முன்னாள் வட்டாரத் தலைவா் நல்லாசிரியா் அன்பழகன், முன்னாள் மாவட்டத் தலைவா் ஸ்ரீதா், துணைத் தலைவா் சண்முகம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் மாலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாரச் செயலா் நாராயணன் வரவேற்றாா். இதில், பெண்கள் என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் சங்க பொதுச் செயலா் ஆதவன்தீட்சண்யா பேசினாா். வெள்ளி விழா காணும் ஆசிரியா்களை பாராட்டி மாநிலச் செயலா் டேவிட்ராஜன் பேசினாா். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி செயல்பாடுகள் குறித்து மாநிலப் பொருளாளா் மேத்யூ பேசினாா். நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்டத் தலைவா் சாந்தி, பொருளாளா் கிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினா் அந்தோணிராஜ், பட்டதாரி அறிவியல் ஆசிரியா் ராஜவேலு உள்ளிட்ட செங்கம் வட்டக் கிளை நிா்வாகிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். கவிஞா் முரளி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com