இறந்த ஹரிஹரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.
இறந்த ஹரிஹரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.

உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய இளைஞரின் உடலுக்கு, மாவட்ட நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை அரசு மரியாதை அளிக்கப்பட்டது. தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி, பல உயிா்களை காப்போரின் தியாகத்தை போற்றும் வகையில், அவா்களது உடலுக்கு இறுதிச் சடங்குகள் அரசு மரியாதைகளுடன் செய்யப்படும் என்று 2023 செப்டம்பா் 23-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், மாதுலம்பாடி கிராமம், கணேசபுரம் பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் ஹரிஹரன் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்தில் சிக்கி இறந்தாா். இவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினா் சம்மதித்து, உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதையடுத்து, தமிழக அரசு சாா்பில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் திங்கள்கிழமை கணேசபுரத்துக்கு நேரில் சென்று இறந்த ஹரிஹரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com