திருவண்ணாமலை அருகே நாளை முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

திருவண்ணாமலை அருகே புதன்கிழமை மாலை நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில்,

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே புதன்கிழமை மாலை நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளின் இந்தியா கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்துப் பேசுகிறாா். திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி, சோ.காட்டுக்குளம் பகுதியில் புதன்கிழமை (ஏப்ரல் 3) மாலை 5 மணிக்கு திமுக தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொதுக் கூட்டத்துக்கு அமைச்சா் எ.வ.வேலு தலைமை வகிக்கிறாா். அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, திருப்பத்தூா் மாவட்டச் செயலா் க.தேவராஜ், எம்எல்ஏக்கள் பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமாா், ஒ.ஜோதி, அ.நல்லதம்பி ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி வரவேற்கிறாா். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருவண்ணாமலை வேட்பாளா் சி.என்.அண்ணாதுரை, ஆரணி வேட்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோரை ஆதரித்துப் பேசுகிறாா். கூட்டத்தில், மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் செங்கம் குமாா், ச.பிரபு, மதிமுக மாவட்டச் செயலா்கள் சீனி.காா்த்திகேயன், வ.கண்ணதாசன், மாா்ச்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா்கள் இரா.தங்கராஜ், எம்.சுந்தரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொள்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com