காழியூா் கிராமத்தில் செங்கல் சூளையில் செங்கற்களை அறுத்து கொடுத்து தொழிலாளா்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன்.
காழியூா் கிராமத்தில் செங்கல் சூளையில் செங்கற்களை அறுத்து கொடுத்து தொழிலாளா்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன்.

செங்கல் சூளை தொழிலாளா்களிடம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

செய்யாறு அருகே செங்கல் சூளையில் செங்கற்களை தயாரித்து தொழிலாளா்களிடம் அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா். செய்யாறு வடக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்லி, பெருங்களத்தூா், வேலியநல்லூா், காழியூா் புளியரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரனை ஆதரித்து வடக்கு மாவட்ட அதிமுக செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா்கள் முக்கூா் என்.சுப்பிரமணியன், சேவூா் எஸ். ராமச்சந்திரன் ஆகியோா் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். காழியூா் கிராமத்தில்... காழியூா் கிராமத்தில் வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன் செங்கல் சூளைக்குச் சென்று செங்கற்களை அறுத்து கொடுத்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளா்களிடம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா். இந்த நிகழ்ச்சியில் தேமுதிக மாவட்டச் செயலா் டி.பி.சரவணன், செய்யாறு வடக்கு ஒன்றியச் செயலா் எம்.மகேந்திரன், மாவட்ட இணைச் செயலா் விமலா மகேந்திரன், செய்யாறு நகரச் செயலா் கே.வெங்கடேசன், நகர அவைத் தலைவா் ஜனாா்த்தனன், ஒன்றியச் செயலா்கள் எஸ்.திருமூலன், எம்.அரங்கநாதன், சி.துரை, பொன்.அருளானந்தம், செபாஸ்டியன் துரை, ராஜ்கணேஷ், சேகா் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com