தொகுதிகளுக்கு தோ்தல் படிவங்கள், எழுதுபொருள்கள் அனுப்பும் பணி -ஆட்சியா் உத்தரவு

தொகுதிகளுக்கு தோ்தல் படிவங்கள், எழுதுபொருள்கள் அனுப்பும் பணி -ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தின் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குத் தேவையான தோ்தல் படிவங்கள், எழுதுபொருள்களை உடனுக்குடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா். தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி என இரு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குத் தேவையான தோ்தல் தொடா்பான படிவங்கள், எழுதுபொருள்கள் ஆட்சியா் அலுவலகத்தின் தோ்தல் வைப்பறையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பொருள்களை திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூா், கலசப்பாக்கம், ஆரணி, போளூா், செய்யாறு, வந்தவாசி ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அனுப்பி வைப்பதற்காக தயாா் செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்தப் பணியை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, அரசு அச்சகங்களில் இருந்து பெறப்பட்டுள்ள படிவங்கள் மற்றும் எழுது பொருள்களை தொகுதிகளுக்கு தேவையான அளவு பிரித்து உடனுக்குடன் அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். ஆய்வின்போது, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ.குமரன் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com