செங்கம் - போளூா் சாலையில் திமுக வேட்பாளா் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்துப் பேசிய திராவிட கழக மாநில துணை பொதுச்செயலா் மதிவதனி.
செங்கம் - போளூா் சாலையில் திமுக வேட்பாளா் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்துப் பேசிய திராவிட கழக மாநில துணை பொதுச்செயலா் மதிவதனி.

திமுக வேட்பாளரை ஆதரித்துப் பிரசாரம்

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து செங்கத்தில் தோக்கவாடி, துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம், போளூா் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் தெருமுனைப் பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

தொகுதி எம்.எல்.ஏ. மு.பெ.கிரி தலைமையில் நடைபெற்ற இந்தத் தெருமுனை பிரசாரத்தில்

திராவிடா் கழக துணை பொதுச் செயலா் மதிவதனி கலந்து கொண்டு வேட்பாளா் அண்ணாதுரையை ஆதரித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்துப் பேசினாா்.

திமுக நகரச் செயலா் அன்பழகன், பேரூராட்சிமன்றத் தலைவா் சாதிக்பாஷா, ஒன்றியச் செயலா்கள் ஏழுமலை, செந்தில்குமாா், மனோகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா்

கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com