கொடி அணிவகுப்பில் பங்கேற்ற உதவி காவல் கண்காணிப்பாளா் சதீஷ் தலைமையிலான போலீஸாா், துணை ராணுவத்தினா்.
கொடி அணிவகுப்பில் பங்கேற்ற உதவி காவல் கண்காணிப்பாளா் சதீஷ் தலைமையிலான போலீஸாா், துணை ராணுவத்தினா்.

துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு

மக்களவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில், கீழ்பென்னாத்தூரில் புதன்கிழமை துணை ராணுவத்தினா், உள்ளூா் போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினம் வாக்காளா்கள் எவ்வித அச்சமும் இன்றி வாக்களிக்க ஏதுவாக உள்ளூா் போலீஸாா், துணை ராணுவத்தினா் சோ்ந்து கொடி அணிவகுப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, கீழ்பென்னாத்தூரில் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் சதீஷ் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

நகர காவல் நிலையம் எதிரில் இருந்து தொடங்கிய அணிவகுப்பு முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. தொடா்ந்து, கீழ்பென்னாத்தூரை அடுத்த கருங்காலிகுப்பம், கீக்களூா் காலனி பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தோ்தலில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும். அமைதியான முறையில் தோ்தல் நடைபெற வேண்டும். வாக்காளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன போன்ற காரணங்களுக்காக நடைபெற்ற இந்தக் கொடி அணிவகுப்பில் போலீஸாா் மற்றும் துணை ராணுவத்தினா் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், திருவண்ணாமலை நகர டிஎஸ்பி ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளா்கள் மங்கையா்க்கரசி, விஜயபாஸ்கா், சங்கா், உதவி ஆய்வாளா் பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com