பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரிக்கை

அரசு அலுவலா்கள், ஆசிரியா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கம் கேட்டுக்கொண்டது.

இந்தச் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை தனியாா் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் தி.பூ.உருத்திரப்பன் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் கு.பாபுராதாகிருஷ்ணன், பொருளாளா் வே.கமலநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட துணைத் தலைவா் கோ.சந்திரசேகரன் வரவேற்றாா். கூட்டத்தில், சங்கத்தின் மாநில இணைச் செயலரும், திருவண்ணாமலை நகரச் செயலருமான அப்பு சிவராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.

கூட்டத்தில், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு மிகை ஊதியமாக கூடுதலாக 10 சதவீதம் வழங்க வேண்டும். அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா்கள் பொன்.அன்பழகன், அ.அப்துல்காதா், அமைப்புச் செயலா் தா.சுந்தரமூா்த்தி, மாவட்ட பிரசார செயலா் செ.துரைசாமி, கிளைத் தலைவா்கள் கே.வாசு, கு.ஜோதிலிங்கம், பொன்.முருகையன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com