வந்தவாசி ஸ்ரீகோதண்டராமா் திருக்கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி.
வந்தவாசி ஸ்ரீகோதண்டராமா் திருக்கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி.

வந்தவாசியில் ஸ்ரீராம நவமி உற்சவம்

வந்தவாசி: வந்தவாசி பஜனை கோவில் தெருவில் உள்ள ஸ்ரீசீதா சமேத ஸ்ரீகோதண்டராமா் திருக்கோயிலில் ஸ்ரீராம நவமி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி மூலவா்களான ராமா், லட்சுமணன், சீதை, அனுமன் ஆகியோருக்கும், இராமானுஜா், கருடாழ்வாா் ஆகியோருக்கும் விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து சுவாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பாகவத குழுவினா் நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களை பாடினா். ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை நிா்வாகிகள் உற்சவத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com