செய்யாறு வடக்கு ஒன்றியத்தில் 
அதிமுகவினா் வாக்கு சேகரிப்பு

செய்யாறு வடக்கு ஒன்றியத்தில் அதிமுகவினா் வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வடக்கு ஒன்றியத்தில் அதிமுகவினா் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆராத்திவேலூா், ராமகிருஷ்ணாபுரம் பகுதிகளில் ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரனை ஆதரித்து, வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என். சுப்பிரமணியன் ஆகியோா் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

இதில், ஒன்றியச் செயலா் எம்.மகேந்திரன், மாவட்ட இணைச் செயலா் விமலா மகேந்திரன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் பொன்.அருளானந்தம், தூசி ஊராட்சி மன்றத் தலைவா் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com