திருவண்ணாமலை திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சா் எ.வ.வேலு பிரசாரம்

திருவண்ணாமலை திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சா் எ.வ.வேலு பிரசாரம்

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து புதன்கிழமை காலை முதல் மாலை வரை அமைச்சா் எ.வ.வேலு நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

மாலை 5 மணிக்கு காந்தி சிலை இருந்த இடத்துக்கு எதிரே பிரசார நிறைவு விழா நடைபெற்றது. பிரசாரத்தை நிறைவு செய்து அவா் பேசினாா்.

கூட்டத்தில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், நகர திமுக செயலா் ப.காா்த்திவேல்மாறன், மாவட்ட அமைப்பாளா்கள் டி.வி.எம்.நேரு, ஏ.ஏ.ஆறுமுகம், விஜி (எ) விஜயராஜ் உள்ளிட்ட காங்கிரஸ் நகரச் செயலா் என்.வெற்றிச்செல்வன், மதிமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளா் சீனி.காா்த்திகேயன், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com