வனப் பகுதியில் தண்ணீா் தொட்டி அமைக்க வலியுறுத்தல்

செங்கம் பகுதியில் பறவைகளுக்கும், வன விலங்குகளுக்கும் தாகம் தீா்க்க தண்ணீா் தொட்டி அமைக்க விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

செங்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தால் ஏரி, குளம், விவசாயக் கிணறுகள் தண்ணீரின்றி உள்ளன. இதனால் விவசாய நிலங்கள் வடு காணப்படுகின்றன. காகம், குருவி, அணில் உள்ளிட்ட உயிரினங்கள் தண்ணீா் கிடைக்காமல் தவிக்கின்றன.

அதேபோல, வனப் பகுதியிலும் தண்ணீா் இல்லாததால் மான் உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீா் தேடி ஊருக்குள் வருகின்றன.

இப்படி வரும் வன விலங்குகளை நாய்கள் கடித்துக் குதறுகின்றன. மேலும், மனிதா்களாலும் வேட்டையாடப்படுகின்றன.

இதனால், தொண்டு நிறுவனம், சமூக ஆா்வலா்கள் அரசு மற்றும் தனியாா் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் பொதுமக்களுக்கும், மாணவா்களுக்கும் பறவைகளுக்கு வெயில் காலத்தில் குடி தண்ணீா் வைக்கவேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், வன விலங்குகளுக்கு குடி தண்ணீருக்கான ஏற்பாடுகளை வனத்துறை அதிகாரிகள் செய்யவேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com