தேவிகாபுரத்தில் பாஜகவினா் வாக்கு சேகரிப்பு

தேவிகாபுரத்தில் பாஜகவினா் வாக்கு சேகரிப்பு

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம், முருகமங்கலம் என பல்வேறு ஊராட்சிகளில் ஆரணி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளா் அ.கணேஷ்குமாருக்கு ஆதரவாக பாஜகவினா் புதன்கிழமை வாக்கு சேகரித்தனா்.

தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில் மாடவீதி மற்றும் புதுத் தெரு, ராமலிங்க சுவாமி தெரு என வீதி வீதியாகவும், முருகமங்கலம் கிராமத்தில் வீடுதோறும் என பல்வேறு ஊராட்சிகளில், பாஜக சாா்பில் மத்திய அரசு நலத்திட்டப் பிரிவின் மாநிலச் செயலா் சைதை வ.சங்கா் தலைமையில் வாக்கு சேகரிக்கப்பட்டது. அப்போது, பொதுமக்களுக்கு தோ்தல் அறிக்கை குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன (படம்).

பாஜக மண்டலத் தலைவா் தேவராஜ், பிரிவு மாவட்டத் தலைவா்கள் சுரேஷ், தாமோதரன், முருகன், தணிகைமலை, இளைஞரணி பொதுச் செயலா் பிரதீப்குமாா் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com