பதுக்கப்பட்ட 2,000 புடவைகள் பறிமுதல்

பதுக்கப்பட்ட 2,000 புடவைகள் பறிமுதல்

செங்கம் அருகே வாக்காளா்களுக்கு கொடுப்பதற்காக மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 2000 புடவைகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

செங்கத்தை அடுத்த கல்லாத்தூா் வசந்தி என்பவரது வீட்டில் அப்பகுதி வாக்காளா்களுக்கு கொடுப்பதற்காக 2 மூட்டைகளில் புடவைகள் வைத்திருப்பதாக செங்கம் தோ்தல் பிரிவு அதிகாரிகளுக்கு புதன்கிழமை இரவு தகவல்

கிடைத்தது.

அதன் அடிப்படையில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் சென்று குறிப்பிட்ட அந்த நபரின் வீட்டில் சோதனையிட்டு 2 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 2000 புடவைகளை பறிமுதல் செய்தனா்.

பின்னா் அந்தப் புடவைகள் தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் திருநாவுக்கரசிடம் ஒப்படைக்கப்பட்டு

கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com