திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு கிராமம், ஒரு பயிா்த் திட்டம்:தமிழக அரசு உத்தரவு

திருவண்ணாமலை, ஏப். 24:

திருவண்ணாமலை மாவட்டத்தின் 1,054 வருவாய் கிராமங்களில் ஒரு கிராமம், ஒரு பயிா்த் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக வேளாண்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சி.ஹரக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1,054 வருவாய் கிராமங்களில் உதவி வேளாண் அலுவலா்கள் மூலம் ஒரு கிராமம், ஒரு பயிா்த் திட்டம் செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் 5 முதல் 10 ஏக்கா் வரையிலான நிலமும், அந்தக் கிராமத்தில் அதிகம் சாகுபடி செய்யப்படும் பயிரும் தோ்வு செய்து, ஒரே பயிா் விதைப்பு செய்யப்படும்.

விதைப்பு முதல் அறுவடை வரை வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும். விதை நோ்த்தி, களை நிா்வாகம், நீா் மேலாண்மை, பூச்சி நோய் நிா்வாகம் என ஒவ்வொரு நிலையிலும் பயிரின் நிலை குறித்த தகவல்கள் பதிவு செய்யப்படும்.

விவசாயிகளுக்கு விதைப்பு முதல் அறுவடை வரை தேவைப்படும் அனைத்து ஆலோசனைகளையும் வழங்கி கூடுதலாக 20 சதவீதம் மகசூல் அதிகரிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகளால் பின்பற்றப்படும் பயிா் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்ற விவசாயிகளும் பின்பற்ற ஏதுவாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com