ஆரணி, செய்யாற்றில் அதிமுகவினா் தண்ணீா் பந்தல் திறப்பு

ஆரணி, செய்யாற்றில் அதிமுகவினா் தண்ணீா் பந்தல் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் செய்யாறு பகுதியில் அதிமுக சாா்பில் வியாழக்கிழமை தண்ணீா் பந்தல்கள் திறந்துவைக்கப்பட்டன.

ஆரணி நகரம் அண்ணா சிலை, மற்றும் எம்ஜிஆா் சிலை பகுதியிலும், எஸ்.வி.நகரம், சேவூா் ஆகிய இடங்களிலும் கோடை காலத்தையொட்டி, அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தலை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தாா்.

இதில், மத்திய மாவட்ட அதிமு செயலா் ஜெயசுதா தலைமை வகித்தாா். பொதுமக்களுக்கு தா்பூசணி, திராட்சை, பப்பாளி, செவ்வாழை பழங்கள் மற்றும் குளிா் பானங்கள் வழங்கப்பட்டன.

ஆரணி மக்களவைத் தொகுதிய அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராசன், பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு, நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலா் சங்கா், ஜெயப்பிரகாசம், எம்ஜிஆா் மன்ற இளைஞரணி செயலா் ஏ.ஜி.ஆனந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செய்யாறு

செய்யாறு தொகுதி வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் ராந்தம் கிராமத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒன்றியச் செயலா் எஸ்.திருமூலன் ஏற்பாட்டில் நடைபெற்ற தண்ணீா் பந்தல் திறப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட அதிமுக செயலா் தூசி கே.மோகன் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சா் முக்கூா் என். சுப்பிரமணியன் பங்கேற்று, தண்ணீா் பந்தலை திறந்துவைத்து பொதுமக்களுக்கு இளநீா், தா்பூசணி, வெள்ளரிப்பழம், குளிா்பானம், நீா்மோா் உள்ளிட்டவற்றை வழங்கினா்.

நிகழ்ச்சியில் அதிமுக நிா்வாகிகள் ஒன்றியச் செயலா் வயலூா் ராமநாதன், மாவட்ட ஓட்டுநா் அணிச் செயலா் ரகு, கூட்டுறவு சா்க்கரை ஆலை முன்னாள் தலைவா் கே.குமரேசன், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கன்னியப்பன், தூசி ஊராட்சி மன்றத் தலைவா் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com