இருசக்கர வாகனத்தில் ஏற முயன்ற மூதாட்டிதவறி விழுந்து உயிரிழப்பு

வந்தவாசி அருகே இருசக்கர வாகனத்தில் ஏற முயன்ற மூதாட்டி தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

வந்தவாசி அருகே இருசக்கர வாகனத்தில் ஏற முயன்ற மூதாட்டி தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த திரக்கோயில் கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மனைவி குப்பம்மாள்(80). கடந்த வெள்ளிக்கிழமை இவா் தனது மகன் மூா்த்தியுடன் விவசாய நிலத்துக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் ஏறியுள்ளாா்.

அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து குப்பம்மாள் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவா் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குப்பம்மாள் சனிக்கிழமை மாலை இறந்தாா்.

இதுகுறித்து குப்பம்மாளின் மகன் மூா்த்தி அளித்த புகாரின்பேரில் தேசூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com