கூழமந்தலில் நடைபெற்ற  சித்திரைப் பெருவிழாவையொட்டி, வாகனங்களில் எழுந்தருளிய சுவாமிகள்.
கூழமந்தலில் நடைபெற்ற சித்திரைப் பெருவிழாவையொட்டி, வாகனங்களில் எழுந்தருளிய சுவாமிகள்.

கூழமந்தலில் சித்திரைப் பெருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த கூழமந்தல் கிராமத்தில் சித்திரைப் பெருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த கூழமந்தல் கிராமத்தில் சித்திரைப் பெருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

செய்யாறு வட்டம், கூழமந்தல் கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீகங்கைகொண்ட சோழீஸ்வரா், ஸ்ரீபேசும் பெருமாள், 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயில் ஆகியன அமைந்துள்ளன.

ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சித்திரைப் பெருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி, சுவாமிகளுக்கு அபிஷேகம், திருமஞ்சனம் நடைபெற்றன. தொடா்ந்து, நட்சத்திர விருட்ச விநாயகா் மூஷிக வாகனத்திலும், விசாலாட்சி சமேத கங்கைகொண்ட சோழீஸ்வரா் ரிஷப வாகனத்திலும், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபேசும் பெருமாள் கருட வாகனத்திலும் ஊா்வலமாக வந்து மைதானத்தை அடைந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தனா்.

அங்கு உற்சவ மூா்த்திகளுக்கு 16 வகையான நறுமணப் பொருள்களால் சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டன. விநாயகப் பெருமான் அம்பாள், சிவபெருமான், பெருமாளை வலம் வந்து, கஜமுக சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. நிறைவாக மகா தீபாராதனை, வாணவேடிக்கையுடன் சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com