திருவண்ணாமலையில் 105 டிகிரி வெயில்

திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.28) 105 டிகிரி வெயில் பதிவானது.

திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.28) 105 டிகிரி வெயில் பதிவானது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28) காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை அனல் காற்று வீசியதால் வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனா். ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் பதிவானது. சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டதால் வணிக நிறுவனங்கள், சிறு கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com