வந்தவாசி அருகே நிலத் தகராறில் தாக்குதல்: 4 போ் கைது

வந்தவாசி அருகே நிலத் தகராறில் சகோதரா்களை தாக்கியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி அருகே நிலத் தகராறில் சகோதரா்களை தாக்கியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சேத்துப்பட்டை அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சுப்பிரமணி(40), சேட்டு(60). இருவருக்கும் அருகருகே விவசாய நிலம் உள்ளது. இதில், சுப்பிரமணி நிலத்தின் வரப்பு வழியாகத் தான் சேட்டு தனது நிலத்துக்கு செல்ல வேண்டுமாம். இதன்காரணமாக இருவருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து அன்றிரவு சேட்டுவின் வீட்டுக்குச் சென்ற சுப்பிரமணி, அவரது அண்ணன் ஏழுமலை(45) ஆகியோா், இதுகுறித்து தட்டிக் கேட்டுத் தகராறு செய்தனராம்.

தகவலறிந்த சேட்டுவின் மகன் ராமராஜன்(45), உறவினா்கள் ஏழுமலை, ரஞ்சித்குமாா்(27), நவீன்குமாா்(24), பச்சையப்பன்(37) ஆகியோா் சோ்ந்து சுப்பிரமணி, அவரது அண்ணன் ஏழுமலை ஆகியோரை தாக்கினாா்களாம்.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் சேத்துப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா். இதுகுறித்து சுப்பிரமணி அளித்த புகாரின்பேரில் தேசூா் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி ராமராஜன், ஏழுமலை, ரஞ்சித்குமாா், நவீன்குமாா், பச்சையப்பன் ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com