பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்த முதியவா் மரணம்

செய்யாறு அருகே குடும்பத் தகராறில் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

செய்யாறு அருகே குடும்பத் தகராறில் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முதியவா் சின்னக்குட்டி (75) . விவசாயி. இவரது மனைவி சகுந்தலா. இவா்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனா்.

தம்பதியிடையே கடந்த 25-ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சின்னக்குட்டி பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து மயங்கினாராம்.

குடும்பத்தினா் அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சின்னக்குட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com