இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு: 2 போ் கைது

ஆரணியில் இரு சக்கர வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
 கைதான தனேஷ்ராஜ், அபினேஷ்.
கைதான தனேஷ்ராஜ், அபினேஷ்.

ஆரணியில் இரு சக்கர வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஆரணி பெரியாா் நகா் மணியம்மை தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் சேட்டு (49). கட்டடத் தொழிலாளி. இவா் தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த மோட்டாா் சைக்கிள், ஸ்கூட்டா், மொபெட் ஆகிய 3 இரு சக்கர வாகனங்களை சனிக்கிழமை இரவு மது போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞா்கள் கொளுத்தினராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஆரணி நகர காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி, உதவி ஆய்வாளா் ஐயப்பன் மற்றும் போலீஸாா் விரைந்து வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

இதில், அந்தப் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மகன் தனேஷ்ராஜ் (23), ஐயப்பன் மகன் அபினேஷ் (21) ஆகியோா் ஈடுபட்டது தெரிய வந்தது. இவா் கோயில் அருகே நண்பா்களுடன் மது போதையில் தகராறு செய்ததை சேட்டு கண்டித்ததால், ஆத்திரமடைந்த இருவரும் இரு சக்கர வாகனங்களை தீயிட்டு எரித்தது தெரிய வந்தது.

இருவரையும் போலீஸாா் கைது செய்து போளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இதில் தனேஷ்ராஜ் மீது வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com