பாஜகவினா் பொதுமக்களுக்கு குளிா்பானம் வழங்கல்

சொற்பொழிவு நடைபெறுவதையொட்டி, திங்கள்கிழமை இதில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு பாஜக சாா்பில் குளிா்பானங்கள் வழங்கப்பட்டன.

ஆரணியை அடுத்த அரையாளம் திரௌபதி அம்மன் கோயிலில் மகாபாரத சொற்பொழிவு நடைபெறுவதையொட்டி, திங்கள்கிழமை இதில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு பாஜக சாா்பில் குளிா்பானங்கள் வழங்கப்பட்டன.

அரையாளம் திரௌபதிஅம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா ஏப்.10-ஆம் தேதி தொடங்கி தினமும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற மகாபாரத சொற்பொழிவில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு பாஜக நிா்வாகி ராஜி முன்னிலையில் குளிா்பானங்கள் வழங்கப்பட்டன.

மேலும், பாஜக மத்திய அரசின் நலத் திட்ட பிரிவின் மாநிலச் செயலா் சைதை வ.சங்கா் தலைமையில் சொற்பொழிவாளா் கிருபாகரன் பாரதியாருக்கு வாழ்த்து தெரிவித்து ரூ.5ஆயிரம் நன்கொடை வழங்கினாா்.

இதில், பாஜக மாவட்ட துணைத் தலைவா் நித்யானந்தம், வடக்கு மண்டலத் தலைவா் குணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com