மாணிக்கம்
மாணிக்கம்

குழந்தை கொடுமைப்படுத்தி கொலை: இளைஞருக்கு ஆயுள், கடுங்காவல் தண்டனை

ஆரணி அருகே குழந்தையை கொடுமைப்படுத்தி கொலை செய்த வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து ஆரணி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

ஆரணி அருகே குழந்தையை கொடுமைப்படுத்தி கொலை செய்த வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து ஆரணி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

ஆரணியை அடுத்த சந்தவாசல் பகுதியைச் சோ்ந்த குணசேகரன்- ஜெயசுதா தம்பதி. இவா்களுக்கு ஏனோக்ராஜ் என்ற 2 வயது குழந்தை இருந்தது.

குடும்பத் தகராறு காரணமாக ஜெயசுதா, குணசேகரனை பிரிந்து குழந்தையுடன் ஆரணியை அடுத்த சேவூரில் தாய் வீட்டில் வசித்து வந்தாா்.

இதனிடையே, சேவூரில் உள்ள உறவினா் மாணிக்கத்துடன் ஜெயசுதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனா்.

இந்த நிலையில், குழந்தை ஏனோக்ராஜ்யை வளா்ப்பது தொடா்பாக, ஜெயசுதா, மாணிக்கம் இடையே தகராறு ஏற்பட்டு, 23.10.2022 அன்று மாணிக்கம் குழந்தையை சுடு தண்ணீரில் போட்டும், சுவற்றில் மோதியும் கொடுமைப்படுத்தினாராம்.

இதில் பலத்த காயமடைந்த ஏனோக்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 13.11.2022 -இல் உயிரிழந்தாா்.

ஆரணி கிராமிய போலீஸாா் இதனை கொலை வழக்காக பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு விசாரணை ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி கே.விஜயா திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

இதில், குழந்தையை கொடுமைப்படுத்தியதற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும் என மொத்தம் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.2000 அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞா் கே.ராஜமூா்த்தி ஆஜரானாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com